\

நாச்சியார் படப்பிடிப்பு தொடக்கம்.. செப்டம்பரில் வெளியிட திட்டம்

நாச்சியார் படப்பிடிப்பு தொடக்கம்.. செப்டம்பரில் வெளியிட திட்டம்
Published on

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் பட வேலைகள் படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது.

தாரை தப்பட்டை படத்துக்குப் பின்னர் இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் பாலா, ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் நாச்சியார் படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியிடப்பட்டன. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக நாச்சியார் இருக்கலாம் என்று தலைப்பே உணர்த்தியது. இந்தநிலையில், படப்பிடிப்பு வேலைகளை இன்று தொடங்கப்படுவதாகவும், செப்டம்பரில் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com