மிஷ்கினின் ’பிசாசு 2 ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் ’பிசாசு 2’படத்தை இயக்கி வருகிறார். இது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த ’பிசாசு 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதில், ஆண்ட்ரியாவுடன் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
’பிசாசு 2’படத்தின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த 18-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தற்போது பேட்ச் வொர்க் எனப்படும் படப்பிடிப்பை மிஷ்கின் மூன்று நாட்கள் நடத்தினார். அதுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ’பிசாசு 2’படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. மேலும் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.