மிஷ்கின் - பி.சி.ஸ்ரீராம் இணைகிறார் சாந்தனு

மிஷ்கின் - பி.சி.ஸ்ரீராம் இணைகிறார் சாந்தனு

மிஷ்கின் - பி.சி.ஸ்ரீராம் இணைகிறார் சாந்தனு
Published on


இயக்குநர் பாக்யராஜின் மகனான நடிகர் சாந்தனு வெகு காலமாய் தமிழ் திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு இயக்குநர் மிஷ்கின் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோருடன் இணைந்து எடுத்த செல்பியை நேற்று பகிர்ந்துள்ளார். அதில் "புதிதாய் பிறக்கிறேன், என்னை வாழ்த்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘துப்பறிவாளன்’. விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரிலரான அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது "சுட்டுப்பிடிக்க உத்தரவு" என்ற படத்தில் நடித்து வரும் அவர் அடுத்த படத்தை சாந்தனுவை வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சாந்தனு பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யபட்டுள்ள நிலையில், ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com