\
அப்படி இருந்த செல்வராகவன் மனைவி இப்படி மாறிய அதிசயம்

அப்படி இருந்த செல்வராகவன் மனைவி இப்படி மாறிய அதிசயம்

அப்படி இருந்த செல்வராகவன் மனைவி இப்படி மாறிய அதிசயம்
Published on: 

இயக்குநர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி தனது உடல் எடையை குறித்து ஸ்லிம் ஆன புகைப்படம் வலைதளத்தில் பரபரப்பாகி வருகிறது.

கீதாஞ்சலிக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் ஏற்கெனவே செல்வாவின் திரைப்பட தயாரிப்பு பக்கம் உதவியாளராக இருந்து வந்தார். அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. பின் இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடைபெற்றது. இயல்பாகவே உடற்பருமனாக இருந்து வந்த கீதாஞ்சலி திருமணத்திற்குப் பிறகு மிகவும் குண்டாகி இருந்தார். அதன் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் வளர்ந்ததும் சினிமா இயக்குநராக அவதாரம் எடுத்தார். சமீபகாலமாக தனது உடல் எடையை குறைத்து ‘அவரா? இவர்?’ என ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்லிம் ஆகியிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை தற்சமயம் செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் “மனைவியுடன் வெளியே கிளம்புவது ரொம்ப சிரமம். அவள் போட்டோ ப்ரியர். எனக்கு போட்டோ என்றாலே அலர்ஜி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஜோடியின் புகைப்படத்தை ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com