அது என் கோபத்தின் வெளிப்பாடு: பூர்ணா விளக்கம்!

அது என் கோபத்தின் வெளிப்பாடு: பூர்ணா விளக்கம்!
அது என் கோபத்தின் வெளிப்பாடு: பூர்ணா விளக்கம்!

சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன் மீது நான் வைத்த குற்றச்சாட்டு கோபத்தின் வெளிப்பாடு என்று நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகை பூர்ணாவும் அன்புச்செழியனை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அன்புச்செழியனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று மோசமான வார்த்தைகளால் அவர் டிவிட்டரில் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி பூர்ணா விளக்கம் அளித்துள்ளார். ’கொடி வீரன் படப்பிடிப்பின்போது அசோக்குமாரை தெரியும். அவரது இறுதி சடங்குக்கு சென்றிருந்தேன். அவர் குடும்பத்தினரைப் பார்த்ததும் உடைந்துவிட்டேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அன்புச்செழியனிடம் பேசியதில்லை. அவரைப் பற்றி நான் கேள்விபட்டதை வைத்து டிவிட்டரில் கருத்து தெரிவித்தேன். அது என் கோபத்தின் வெளிப்பாடு. இதை வைத்து எந்த சர்ச்சையையும் கிளப்ப தயாராக இல்லை’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com