வெற்றி மாறன்
வெற்றி மாறன்முகநூல்

“ஒரு பைசா கூட தனுஷ் கேட்கல.. தப்பா பேசுறது வருத்தமா இருக்கு” வெற்றி மாறன் விளக்கம்! #vadachennai

தனுஷுக்கும் வெற்றமாறனுக்கும் இடையே பிரச்னை இருப்பதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், இதுகுறித்து காணொளி வாயிலாக இயக்குநர் வெற்றி மாறனே விளக்கமளித்திருக்கிறார்
Published on

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. இதன்பிறகு, சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்' படத்தை இயக்குவதற்கான வேலைகள் நடந்து வந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அதற்கிடைப்பட்ட காலத்தில் சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.

இந்த திரைப்படம், வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், புரோமோ ஷூட் ஒன்றை வெற்றிமாறன் எடுத்துள்ளார். புரோமோ ஷூட்டில் சிம்பு பங்கேற்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, வெற்றிமாறன் சிம்புவை வைத்து வடசென்னை இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாகவும், இதனால் வடசென்னை பட உரிமையை வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பிரச்சினை எழுந்ததாகவும் செய்திகள் பரவத்தொடங்கின.

இந்தநிலையில், இந்த வதந்திகளுக்கெல்லாம் வீடியோ ஒன்றின் மூலமாக, வெற்றி மாறன் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவில அவர் தெரிவிக்கையில், “ நான் அடுத்த திரைப்படம் நடிகர் சிம்புவை வைத்து இயக்கவுள்ளேன். இப்படம் வட சென்னை டைம்லைனில் நடக்க கூடியவையாகும். வட சென்னை திரைப்படத்தின் கதைக்களம், கதாப்பாத்திரம்,கதை என அனைத்திற்கும் சொந்தக்காரர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். நான் இதுக்குறித்து தனுஷிடம் பேசியபோது அவரிடம் இப்படத்தை என்னால் வட சென்னை பட உலகத்தில் என்னால் இயக்க முடியும் இல்லை என்றால் இது தனி திரைப்படமாகவும் இயக்க முடியும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது என்றேன்.

வெற்றி மாறன்
ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும் என்று புரியவில்லை -பத்திரிகையாளர்களை சாடிய வருண்!

அதற்கு தனுஷ் " உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். அதற்காக எனக்கு ஒரு பணமும் வேண்டாம் " என கூறினார். என்னை பற்றியோ, படத்தை பற்றியோ, தனுஷை பற்றியோ யூடியூபில் பேசுவது எனக்கு வேதனை அளித்தது. தனுஷுக்கும் எனக்கும் உள்ள உறவு இந்த ஒரு சம்பவத்தினாலோ, படத்தினாலோ உடைந்து விடாது. நடிகர் சிம்புவுக்கும் படத்திற்கு எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். என கூறினார்.

என்னை யாரும் வற்புறுத்தி ஒரு விஷயத்தை செய்ய வைக்க முடியாது. இணையத்தில் பேசுவது அனைத்தும் வதந்தியே" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com