தேனாண்டாள் கம்பெனியின் அடுத்த இயக்குநர் தனுஷ்

தேனாண்டாள் கம்பெனியின் அடுத்த இயக்குநர் தனுஷ்

தேனாண்டாள் கம்பெனியின் அடுத்த இயக்குநர் தனுஷ்
Published on

தான் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவலை நடிகர் தனுஷ் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

நடிகராக இருந்த தனுஷ ப.பாண்டி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. படமும் நல்ல வெற்றியை அடைந்தது. தனுஷின் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருந்தது. படம் வெளியான உடனே ப.பாண்டியின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல், தனுஷ் இயக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

இதனிடையே, எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை ஆகிய படங்களில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். மேலும், மாரி2 படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்து படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில்,  'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்திற்காக ஒரு படத்தை அடுத்த இயக்க உள்ளதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்த இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பான அறிவிப்புகள் 2018-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com