சினிமா
”என் பேரனுக்கு ‘அண்ணாத்த’ மிகவும் பிடித்துள்ளது; அவனுக்கு அவ்ளோ சந்தோஷம்” - ரஜினி
”என் பேரனுக்கு ‘அண்ணாத்த’ மிகவும் பிடித்துள்ளது; அவனுக்கு அவ்ளோ சந்தோஷம்” - ரஜினி
’அண்ணாத்த’ திரைப்படம் தனது பேரனுக்கு மிகவும் பிடித்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் ஹூட் பக்கத்தில் குரல் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’அண்ணாத்த’ வரும் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தன் குடும்பத்தினருடன் தனித்த திரையிடலில் படத்தை பார்த்த ரஜினிகாந்த், ’அண்ணாத்த’ திரைப்படம் தனது பேரனுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அதனால் தனக்கு பெரிதும் மகிழ்ச்சி எனவும் ஹூட் தளத்தில் குரல் பதிவிட்டுள்ளார்.
ரஜினி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கம், செளந்தர்யாவின் மகன் வேத்தும் உடனிருக்கிறார்கள்.