சினிமா
ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை: சமுத்திரக்கனி பெருமிதம்
ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை: சமுத்திரக்கனி பெருமிதம்
காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்ததை வாழ்நாள் சாதனையாக கருதுவதாக இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
காலா படத்தில் சமுத்திரக்கனியும் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினியுடன் தோன்றும் முதல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும் பெருமையாக உணர்ந்தேன். அது எனக்கு வாழ்நாள் சாதனையாக தோன்றியது. இந்த வாய்ப்பிற்காக பல நாட்கள் காத்திருந்தேன்’ என்கிறார் சமுத்திரக்கனி. பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் தாதாவாக நடித்து வரும் ரஜினிக்கு உதவுபராக சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நானா படேகர், ஹூமா க்ரோஷி. அஞ்சலி பட்டீல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

