\
என் முதல் காதல் தோல்வியில் முடிந்தது: ரஜினிகாந்த் ரொமான்ஸ்

என் முதல் காதல் தோல்வியில் முடிந்தது: ரஜினிகாந்த் ரொமான்ஸ்

என் முதல் காதல் தோல்வியில் முடிந்தது: ரஜினிகாந்த் ரொமான்ஸ்
Published on

மலேசியா நட்சத்திர விழா 2018 இல் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய முதல் காதலைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட நிதி திரட்டும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா 2018 மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. கோலாலம்பூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் அரங்கேறின. தமிழகத்தில் அரசியல் குறித்து பரப்பரப்பை ஏற்படுத்தி விட்டு, மலேசியா சென்றார் ரஜினி. அங்கும் அவரைச் சுற்றி பரப்பரப்புகளுக்கு பஞ்சமில்லை.

மேடை ஏறிய ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டகப்பட்டன. அவரிடன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு ரஜினி கூலாகவே பதில் அளித்தார். மேலும், அனைவரும் அறியாத தனது முதல் காதலைப் பற்றியும் ரஜினி மனம் திறந்தார். முதல் காதல் குறித்து அவரிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி “ஆமாம். நானும் காதலில் விழுந்துள்ளேன். எனக்கும் முதல் காதல் குறித்த அனுபவம் உள்ளது. கர்நாடகாவில் நான் பள்ளியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். எல்லோருக்கும் அவர்களுடைய முதல் காதல் என்றும் மறக்க முடியாமல் இதயத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். பலருக்கும் முதல் காதல் கல்யாணத்தில் முடியும். சிலருக்கு முதல் காதல் தோல்வியில் முடியும். இதில் நான் இரண்டாவது வகை. என்னுடைய முதல் காதல் தோல்வியைத் தழுவியது” என்றார். ரஜினியின் இந்தப் பதிலைக் கண்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் பலத்த சத்தத்தை எழுப்பினர். ஆனால், பலமுறை கேட்டும் சூப்பர் ஸ்டார் தான் காதல் கொண்ட பெண்ணின் பெயரைக் கூற மறுத்து விட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com