சென்னைல சத்யம், ஈகா.. - நடிகை மஞ்சிமா மோகனின் தியேட்டர் அனுபவம்.!

சென்னைல சத்யம், ஈகா.. - நடிகை மஞ்சிமா மோகனின் தியேட்டர் அனுபவம்.!
சென்னைல சத்யம், ஈகா..  - நடிகை மஞ்சிமா மோகனின் தியேட்டர் அனுபவம்.!

வரும் அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகை  மஞ்சிமா மோகன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தனது தியேட்டர் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

 “எனது அப்பா கமல்ஹாசனின் தீவிர ரசிகர். அவருடைய எந்தப் படத்தையும் விடமாட்டார். கேரளாவில் உள்ள ஒரு சிறிய தியேட்டரில் ’தெனாலி’ படத்தைப் பார்க்கச் சென்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போதுதான், பெரிய திரையில் ஜோதிகாவை முதன் முதலில் பார்த்தேன். அவரின் அழகை கண்டு வியந்தேன். அதேபோல, ஷங்கர் சாரின் ஜீன்ஸ் படத்தை அப்பாவுடன் தியேட்டரில்தான் பார்த்தேன்.

அதில்வரும், கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் எலும்புக்கூடுகள் ஆடுவதைப் பார்த்து குடும்பமே சிரித்தது மறக்கமுடியாத ஸ்வீட் மெமரீஸ். நான் சென்னையில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அப்போது, சனி ஞாயிறு விடுமுறைகளில் தவறாமல் சினிமாவுக்கு சென்றுவிடுவோம். நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. அவரின், ஏழாம் அறிவு படம் வெளியானபோது டிக்கெட் கிடைக்கவில்லை.

பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு கடைசியில்தான் கிடைத்தது. முதல் வரிசையில் சத்யம் தியேட்டரில் பார்த்தோம். அதேபோல, ஈகா தியேட்டரில் மலையாள சினிமாக்களை பார்க்கச் செல்வோம். ஆனால், அப்போது எங்களுக்கு பாக்கெட் மணி குறைவாகத்தான் கிடைக்கும். அதற்கு தகுந்தமாதிரியான தியேட்டர்களுக்கேச் செல்வோம்” என்று தனது தியேட்டர் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com