”என் தந்தை உடல்நிலை சீராக உள்ளது..வதந்திகளை நம்பவேண்டாம்” – எஸ்.பி.பி சரண்

”என் தந்தை உடல்நிலை சீராக உள்ளது..வதந்திகளை நம்பவேண்டாம்” – எஸ்.பி.பி சரண்

”என் தந்தை உடல்நிலை சீராக உள்ளது..வதந்திகளை நம்பவேண்டாம்” – எஸ்.பி.பி சரண்
Published on

பாடகர் பாலசுப்ரமணியனின் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று அவரது மகன் எஸ்.பி சரண் தற்போது கூறியிருக்கிறார். தென்னிந்தியாவின் பிரபல பாடகர் பாலசுப்ரமணியன் இதுவரை 1000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

இவருக்கு கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி தனக்கு லேசான கொரோனா தொற்றுதான். யாரும் கவலை கொள்ளவேண்டாம்’ என்று தெரிவித்தார்.  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு நேற்றுவரை எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று மருத்துவமனை கூறியது.

ஆனால், இன்று வெளியிட்ட அறிக்கையிலோ எஸ்.பி.பி உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வரும் எஸ்.பி.பியின் உடல்நலம் தேறிவரவேண்டும் என்று பேஸ்புக், ட்விட்டர் என்று கோடிக்கணக்கான மக்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், “என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர், ஐ.சி.யூவில் வெண்டிலேஷனில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம். உடல்நிலைக் குறித்த தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com