பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பின் மூலம் உலகையே இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமெளலி.
பாகுபலி இரண்டாம் பாகம் இயக்கத்தில் தீவிரமாக இருந்த நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. கோடை விடுமுறையின் போது படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து ராஜமெளலி என்ன படம் இயக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜமெளலி, ‘மகாபாரத்ததை என்றாவது ஒரு நாள் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். சரித்திரக் கதைகளை கச்சிதமாக உருவாக்கும் ராஜமெளலி, மகாபாரதத்தை இயக்கினால் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும்.