\
நயன்தாராவுடன் டிஜே நடிக்கிறார்

நயன்தாராவுடன் டிஜே நடிக்கிறார்

நயன்தாராவுடன் டிஜே நடிக்கிறார்
Published on: 

நயன்தாரா உடன் நடிக்கிறார் யுடியூப் புகழ் பாடகர் டிஜே

இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறிவரும் காலம் இது. ஏற்கெனவே முழு நேர நடிகராகி விட்டார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவரை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடிகரானார். அடுத்து யு டியூப் மூலம் பிரபலமாகி இசையமைக்க வந்து நடிகரானார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. 
இந்த வரிசையில் இசையமைப்பாளர் கே இணைந்தார். தற்போது டிஜேவும் இணைந்திருக்கிறார். தனி ஆல்பங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமான இவர் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்ததுள்ளார். இவரின் ‘முட்டி முட்டு என்ன முட்டு’பாடல் வலைதள உலகில் மிக பிரபலம். தற்போது நயன்தாரா நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் இவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘அம்சனா’ திரைப்படத்தில் இவரும் நடித்து கொண்டிருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com