"அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்" - முத்தையா முரளிதரன்

"அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்" - முத்தையா முரளிதரன்

"அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்" - முத்தையா முரளிதரன்
Published on

தன்னை தமிழனத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மேலும், 800 பட சர்ச்சை தொடர்பாக அவர் அறிக்கை மூலம் விளக்கமும் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்து குறித்து பேசினால், அதில் தவிர்க்க முடியாத தவறாமல் இடம்பெறும் பெயர் ’முத்தையா முரளிதரன்’. தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர்.

அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு அரசியல் கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாரதிராஜா, விவேக்,சேரன், உள்ளிட்ட முன்னனி சினிமா பிரபலங்களும் விஜய் சேதுபதிக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே 800 திரைப்படம் முற்றிலும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை விளையாட்டு சம்மந்தப்பட்டப் படமே தவிர எந்தவித அரசியலும் கிடையாது என அதன் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதா? இல்லையா என்பது குறித்து ஓரிரு நாளில் விஜய் சேதுபதி முடிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தன்னை தமிழனத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மேலும், 800 பட சர்ச்சை தொடர்பாக அவர் அறிக்கை மூலம் விளக்கமும் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையனாஅலும் சரி தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் எனபலராலும் உருவாக்கப்பட்டன என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துத்தான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலைய தமிழர்கள்தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெடிப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com