’விஜய் 66’ படத்திற்கு இசையமைக்கும் தமன்

’விஜய் 66’ படத்திற்கு இசையமைக்கும் தமன்
’விஜய் 66’ படத்திற்கு இசையமைக்கும் தமன்

’விஜய் 66’ படத்திற்கு இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆறாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கு தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்திற்கும் தமன்தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில்தான் தமன் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அவர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்திலும் நடிகராக அறிமுகமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com