\
‘வஞ்சம் தீர்த்தாயடா’: இளையராஜாவுடன் இணையும் சுசி கணேசன்- அதிகாரபூர்வ அறிவிப்பு

‘வஞ்சம் தீர்த்தாயடா’: இளையராஜாவுடன் இணையும் சுசி கணேசன்- அதிகாரபூர்வ அறிவிப்பு

‘வஞ்சம் தீர்த்தாயடா’: இளையராஜாவுடன் இணையும் சுசி கணேசன்- அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

இயக்குநர் சுசி கணேசனின் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

இயக்குநர் சுசி கணேசன் கடந்த புத்தாண்டு அன்று தனது புதிய படத்தினை அறிவித்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தினை தனது 4வி புரொடொக்‌ஷன் மூலம் இயக்கித் தயாரிக்கிறார். இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகை உள்ளிட்ட படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போது இசைமைப்பாளரை மட்டும் உறுதி செய்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்திருக்கிறார் சுசி கணேசன். பெரும்பாலான இயக்குநர்கள் தனது படங்களுக்கு ஒரே இசையமைப்பாளரை அடுத்தடுத்தப் படங்களுக்கும் பணிபுரிய வைப்பது வழக்கம். ஆனால், சுசி கணேசன் இதுவரை தமிழில் இயக்கிய ஐந்து படங்களுக்குமே வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திலும் அதே பாணியை கடைப்பிடித்து இளையராஜாவுடன் இணைந்திருக்கிறார். தற்போது இந்தியில் ‘தி ஹே ஹிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுசி கணேசன், வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com