“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” - இளையராஜா
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது. இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இப்போது நிஜத்தில் வீரம் கொண்ட நம் ஹீரோக்கள், பஹல்காமில் நடந்த தாக்குதலை எதிர்கொள்ள எல்லைகளில் துணிச்சல், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர். இதை அறியாமலேயே இந்த வருட தொடக்கத்தில், நான் என் முதல் சிம்பொனியை இசையமைத்து அதற்கு ‘வேலியண்ட்’ (வீரமிக்க) என்று பெயரிட்டேன். இத்தருணத்தில் பெருமைமிக்க இந்தியனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நான் என் இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகையையும், ஒரு மாத ஊதியத்தையும் (எம்.பி. சம்பளம்) தேசிய பாதுகாப்பு நிதிக்குத் தருகிறேன். தீவிரவாதத்தை அழிக்கவும், எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நம் ‘வீரமிக்க’ ராணுவ வீரர்களின் மாபெரும் முயற்சிக்காக இதை செய்கிறேன். ஜெய் ஹிந்த்” என அதில் தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் பெருமைமிக்க இந்தியனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நான் என் இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகையையும், ஒரு மாத ஊதியத்தையும் (எம்.பி. சம்பளம்) தேசிய பாதுகாப்பு நிதிக்குத் தருகிறேன். தீவிரவாதத்தை அழிக்கவும், எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நம் ‘வீரமிக்க’ ராணுவ வீரர்களின் மாபெரும் முயற்சிக்காக இதை செய்கிறேன். ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.