\
இளையராஜா
இளையராஜா முகநூல்

”எனது சிம்பொனி இசை ஜன.26ல் வெளியிடப்படும்”-ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளையராஜாவின் அறிவிப்பு!

இசையமைப்பாளர் இளையராஜா தனது சிம்பொனி- 1 அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் நாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
Published on: 

இசையமைப்பாளர் இளையராஜா தனது சிம்பொனி- 1 அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் நாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்த இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன் என்பதையும், அந்த சிம்பொனி இசை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா
”உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ளார்கள்” - ’அமரன்’ படத்தை பார்த்த முதலமைச்சர் பாராட்டிப் பதிவு!

திரையிசை வாயிலாக உலகெங்கும் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள இளையராஜா, தனி இசை வடிவங்களாக உருவாக்கிய HOW TO NAME VANAKKAM TAMILNADU மற்றும் NOTHING BUT WIND போன்றவையும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com