\
நூறு சதவிகித காதலில் ஜீ.வி.பிரகாஷ் குமார்

நூறு சதவிகித காதலில் ஜீ.வி.பிரகாஷ் குமார்

நூறு சதவிகித காதலில் ஜீ.வி.பிரகாஷ் குமார்
Published on

நாக சைதன்யா, தமன்னா நடித்து தெலுங்கில் ஹிட்டான படம், ’100% லவ்’. சுகுமார் இயக்கியிருந்த இந்தப் படம், 2011-ம் ஆண்டு வெளியானது. இதை தமிழில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கிரியேடிவ் சினிமாஸ் என்.ஒய். சார்பில் தெலுங்கில் இயக்கிய சுகுமார், தமிழில் தயாரிக்கிறார். அவருடன் என்.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. எம்.எம்.சந்திரமெளலி இயக்குகிறார். இவர், ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவர். சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம் எனப் பல இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com