\
பாடகர் வேல்முருகனின் காஃபி ஷாப்பை திறந்து வைத்த ஜி.வி பிரகாஷ்

பாடகர் வேல்முருகனின் காஃபி ஷாப்பை திறந்து வைத்த ஜி.வி பிரகாஷ்

பாடகர் வேல்முருகனின் காஃபி ஷாப்பை திறந்து வைத்த ஜி.வி பிரகாஷ்
Published on

பாடகர் வேல்முருகனின் புதிய காஃபி ஷாப்பை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் திறந்து வைத்துள்ளார்.

’மதுர குலுங்க குலுங்க’… ’ஒத்த சொல்லால’… ’சண்டாளி’…  ’அட கருப்பு நிறத்தழகி’  தமிழகமெங்கும் வைரல் ஹிட் அடித்த ’கத்தரி பூவழகி’ என 300-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி தமிழர்களை மகிழ்வித்த பாடகர் வேல் முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார்.

பாடகராக மட்டுமல்லாமல் ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’ 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ப்ரஜின் நடிக்கும் ’சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி’, மிர்ச்சி சிவா நடிப்பில் ’சலூன்’, ‘படைப்பாளன்’, ‘அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா’, யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், வேல்முருகன் சென்னை பெசண்ட் நகரில் கில்லி சாய் என்ற புதிய காஃபி ஷாப்பை ஆரம்பித்துள்ளார். இதனை, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் திறந்து வைத்து வாழ்த்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com