\
நடிகையை மணக்கவுள்ள இசையமைப்பாளர்

நடிகையை மணக்கவுள்ள இசையமைப்பாளர்

நடிகையை மணக்கவுள்ள இசையமைப்பாளர்
Published on

பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தரண், நடிகையும், ஆடை வடிவமைப்பாளரான தீக்ஷிதாவை மணக்க உள்ளார். 

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் செய்தியாளர்களை சந்தித்த தருண், சென்னையை சேர்ந்த மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தீக்‌ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கவுள்ளதாக கூறினார். அவர்களின் திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறினார். 

தீக்‌ஷிதாவுக்கும் அவருக்கும் நடக்க இருக்கும் திருமணம் குறித்து மனம் திறந்து தரண் “நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் எனது 25வது படமான பிஸ்தா படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன். என் எல்லா தருணங்களிலும் என் குடும்பம் எனக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது.” என உணர்வுப் பூர்வமாக பேசினார்.

மணப்பெண் தீக்‌ஷிதா பேசும்போது, “2012ல் இருந்து நான் ஒரு மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறேன். நகர்வலம், ஆகம் என இரண்டு தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன். தற்போது மாடலிங் மற்றும் விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறேன். மண வாழ்க்கையில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com