இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவு: முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவு: முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவு: முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
Published on

இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால காலமானார். இவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமா பேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்!” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com