தமிழ்நாட்டிற்கு நல்ல தலைமை வேண்டும்: ரஹ்மான் சூசகம்
மதசார்பற்ற ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ரஹ்மான் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னையில் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், “கடந்த 25 வருடங்களாக என்னை ஆதரித்தற்கும், அன்பு கொடுத்ததற்கு தமிழக மக்களுக்கு நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே” என்று கூறினார்.
அரசியல் துறையை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சினிமா துறையினர் கைப்பற்ற நினைக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டிற்கு நல்ல தலைமை வேண்டும் என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருக்கலாம் என்று கூறினார்.
பின்னர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த ரஹ்மான், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, சிந்தித்து நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்றார். மேலும், மதசார்பற்ற ஆன்மிக அரசியல் என்று பேசியதற்கு என்ன அர்த்தம் என்று ரஜினிதான் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.