உழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்
இசை அமைப்பாளர் தாஜ்நூர் உருவாக்கியுள்ள ’உழவர் பாடல்’ என்ற இசை ஆல்பத்துக்கு உலகில் உள்ள, பெரும்பாலான இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.
தமிழில், வம்சம், எத்தன், மறுமுனை, ஞானக்கிறுக்கன் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் தாஜ் நூர். இவர் ’உழவர் கீதம்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக உலகின் பெரும்பாலான இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘’ திருக்குறளை வெஸ்டர்ன் இசையில் உருவாக்கி வருகிறேன். அதில் உள்ள இன்பத்துப் பாலை, ’இன்பத் து பாப்’ என்ற பெயரில் வெளியிட இருக்கிறோம். சில திருக்குறளை மட்டும் வீடியோவாக எடுக்க முடிவு செய்தோம். அதன்படி விவசாயம் தொடர்பாக வள்ளுவர் கூறியிருந்த ஒரு குறளை மட்டும் எடுத்து, பாடல் ஆக்கினோம். இன்றைக்கு இருக்கிற அனைத்து வளர்சிக்கும் காரணமாக இருப்பது விவசாயம்தான். அதை மையமாக வைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டது. ஒடிசா மாநில தலைமை செயலாளராக இருக்கும், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பாடலை எழுதினார். இந்தப் பாடலை பிரபல ங்கள் யாரையாவது பாட வைத்தால் ரீச் ஆகும் என நினைத்தோம். அது தள்ளிக் கொண்டே போனதால், அந்தத் திட்டத்தை விட்டோம்.
விவாசயம், உழவு என்பது அனைத்து நாடுக்கும் பொதுவானதுதான் என்பதால் உலக நாடுகளில், முக்கிய அடையாளமாக இருக்கும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். அதன்படி படமாக்கினோம். இதை நானே, இசை அமைத்து இயக் கியுள்ளேன். இந்த ஆல்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’’ என்றார்.