\
விஜய் சேதுபதியின் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் சிம்பு பாடிய முருகா பாடல் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் சிம்பு பாடிய முருகா பாடல் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் சிம்பு பாடிய முருகா பாடல் வெளியீடு!
Published on

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடியுள்ள ’முருகா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் விஜய் சேதுபதி வெளிநாடு வாழ் தமிழராக வந்தார். அதில், ‘நீ யாரு’ என்ற கேள்வியே அதிகம் இடம்பிடித்தது.

ஏற்கனவே, இப்படம் சர்வதேச பிரச்சனைக் குறித்து பேசப்போகிறது என்று கூறப்படுகிறது. டீசர் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று இப்படத்தின் ‘முருகா’ பாடல் வெளியாகியுள்ளது. முருக பக்தராக விஜய் சேதுபதி வெட்டாத முடியுடன் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

சிலம்பரசனும் படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவும் போட்டிப்போட்டுக்கொண்டு பாடலை கேட்பவர்களுக்கும் பக்தி பரவசமூட்டுகிறார்கள். ’இந்த வருசம் திருச்செந்தூர் பாதயாத்திரை போவும் போது சந்தோஷமா கேட்டுட்டு போவ இன்னொரு பாட்டு கிடச்சிட்டு’ என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளில் பாராட்டித் தள்ளிக்கொண்டிருக்கின்றனர். ’மாநாடு’, ’பத்து தல’ படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டே சிலம்பரசன் சமீபத்தில்தான் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் ‘யாரையும் இவ்ளோ’ அழகா பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com