நடிகைக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!

நடிகைக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!

நடிகைக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!
Published on

நடிகை சாயிரா வாசிமுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த மும்பை தொழிலதிபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

அமீர்கான் நடித்த ’தங்கல்’ படத்தில் நடித்தவர் சாயிரா வாசிம் (17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், காஷ்மீரைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்துகொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பின் இருக்கையில் இருந்த நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.  

இது தொடர்பாக சாயிரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விவரித்திருந்தார். இது வைரலானது. இந்த சம்பவம் குறித்து ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், சாயிராவிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் மும்பை சாஹர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரித்த போலீசார் விகாஸ் சச்தேவ் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com