\
வண்ணமயமாக நடந்த எம்டிவி விருது நிகழ்ச்சி: 3 விருதுகளை அள்ளினார் மெ‌ண்டஸ்

வண்ணமயமாக நடந்த எம்டிவி விருது நிகழ்ச்சி: 3 விருதுகளை அள்ளினார் மெ‌ண்டஸ்

வண்ணமயமாக நடந்த எம்டிவி விருது நிகழ்ச்சி: 3 விருதுகளை அள்ளினார் மெ‌ண்டஸ்
Published on

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள்‌ வழங்கும் விழாவில் கனடாவின் பாப் பாடகர் ஷான் மெண்டெஸ், அனைவரையும் வெகுவாக ஈர்த்தார். சிறந்த பாடல், சிறந்த கலைஞர் உள்ளிட்‌ட மூன்று விருதுகளையும் அவர் தட்டிச் சென்றார்.

இசை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் எம்டிவி இசை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்‌றது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை பிரிட்டன் பாடகர் ரிடா ஓரா சிறப்பாக மேற்கொள்ள, அமெரிக்கா ராப் நட்சத்திரமான எமினெம் walk on water என்ற புதிய பாடலுடன் விழாவை தொடங்கி வைத்தார். அத்துடன் ‌சிறந்த ஹிப் ஹாப் பாடலுக்கான விருதையும் எமினெம் தட்டிச் சென்றார். ஆறு விருதுகளை அள்ளுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட், ஒரு விருது கூட பெறாமல் வெறும் கையுடன் நிகழ்ச்‌சியில் இருந்து திரும்பியது, அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.

மூன்று விருதுகளை அள்ளிய மெண்டஸ் தனக்கே உரித்தான பாணியில் பாடலை பாடி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். எம்டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, லண்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படு‌த்தப்பட்டிருந்தது. மேலும் விழா நடந்த அரங்கத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com