\
விஜய் தேவரகொண்டா-மிருணாள் தாகூர்
விஜய் தேவரகொண்டா-மிருணாள் தாகூர்@SVC_official Twitter

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியான ‘சீதா ராமம்’ நாயகி மிருணாள் தாகூர்!

ஹைதராபாத்தில் இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா ‘லிகர்’ தோல்வியை அடுத்து தற்போது, ‘குஷி’ படத்தில் நடித்துள்ளார். சமந்தா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படம் காதல், குடும்பம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. ஷிவ நிர்வாணா இயக்கி வரும் இந்தப் படம், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

விஜய் தேவரகொண்டா- சமந்தா
விஜய் தேவரகொண்டா- சமந்தா@MythriOfficial twitter

இதேபோல், இந்தி தொலைக்காட்சி தொடர் மற்றும் வெள்ளித்திரை நடிகையான மிருணாள் தாகூர், துல்கர் சல்மானுடன் இணைந்து ‘சீதா ராமம்’ என்றப் படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானார். இவர் தற்போது தெலுங்கு நடிகர் நானியின் 30-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் புதியப் படத்தில் மிருணாள் தாகூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹைதராபாத்தில் இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

விஜய் தேவரகொண்டாவின் 13-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை ‘கீதா கோவிந்தம்’, ‘சர்காரு வாரி பட்டா’ படங்களை இயக்கிய இயக்கிய பரசுராம் இயக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகுதான் ராஷ்மிகா மந்தனாவின் கேரியர் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com