Allu Arjun - Mrunal Thakur
Allu ArjunMrunal Thakur

"அல்லு அர்ஜூன் படத்தில் நானா?" ஆச்சர்யமாக கேட்ட மிருணாள் | Mrunal Thakur | Allu Arjun

நான் அல்லு அர்ஜுனின் பெரிய ரசிகை. அட்லீ சாரையும் எனக்கு பிடிக்கும்.
Published on
Summary

மிருணாள் தாக்கூர், அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என கூறியுள்ளார். தென்னிந்திய படத்தில் நடிக்கிறார் என கேள்வி எழுந்த நிலையில், அவர் ஹைதராபாத் செல்லும் காரணமாக இந்தி படத்திற்காக தான் என விளக்கம் அளித்தார். ஆனால், அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும், அது நடந்தால் கொண்டாடுவோம் எனவும் தெரிவித்தார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் அமீன், ஜெஸ்லீன் ராயல் பாடியுள்ள பாடல் `Bheegi Bheegi'. மியூசிக் வீடியோவான இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர். இப்பாடல் வெளியான நிலையில் அதன் புரமோஷனாக சில பேட்டிகளை கொடுத்து வருகிறார் மிருணாள்.

அப்படியான ஒரு பேட்டியின் போது, நீங்கள் ஒரு பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிப்பதாக சொல்லப்படுகிறதே எனக் கேட்கப்பட "நான் ஒரு இந்தி படத்தின் கதையை தான் படித்து வருகிறேன். ஆனால் அதற்காக ஹைதராபாத் செல்கிறேன். எனவே நான் தென்னிந்திய படத்தில் நடிப்பதாக நினைக்கிறார்கள்" என்றார் மிருணாள்.

Allu Arjun
Allu Arjun
Allu Arjun - Mrunal Thakur
”இந்தியாவில் IMAX திரைகள் கேட்டு தர்ணா செய்வேன்!” - ராஜமௌலி | SS Rajamouli | Varanasi | Mahesh Babu

மீண்டும் அந்த தொகுப்பாளர் "இல்லை நான் அல்லு அர்ஜூன் படம் பற்றி கேட்கிறேன்" என சொல்ல "அப்படியா, நிஜமாவா? இது நடந்து கொண்டிருக்கிறதா? நான் நடிக்கிறேன் என சொல்கிறார்களா? நீங்கள் ஒரு விஷயத்தை செய்யுங்கள். இது நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.

அப்படி அது நடந்தால் நாம் இந்த பேட்டியை மீண்டும் பார்த்து கொண்டாடுவோம். ஒருவேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அதில் நடிக்க ஆவலோடு இருக்கிறேன். நான் அல்லு அர்ஜுனின் பெரிய ரசிகை. அட்லீ சாரையும் எனக்கு பிடிக்கும். அது நடந்தால் மகிழ்ச்சி" என்றார் மிருணாள். அல்லு அர்ஜூன் - அட்லீ படத்தில் தீபிகா படுகோன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் மிருணாள் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Allu Arjun - Mrunal Thakur
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’கடவுள் கற்பனை, அழகான பெண்கள் நிஜம்..’ சிக்கிய இந்தியர்? - சின்மயி போட்ட பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com