நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை!

நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை!
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை!

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரும்‌, ஆங்கில தொலைக்காட்சித் தொடரின் நகைச்சுவை நடிகருமான ’மிஸ்டர் பீன்’ என்று அழைக்கக்கூடிய ரோவன் செபாஸ்டின் அட்கின்ஸன் இறந்து விட்டதாகக் கூறப்படும் செய்தி உண்மையில்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’மிஸ்டர் பீன்’ கார் விபத்திலோ அல்லது தற்கொலை செய்து கொண்டோ இறந்திருக்கலாம் என்று ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேற்று செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியால் பீதி அடைந்த பீன், உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளார். தாம் நலமுடன் உள்ளதாகவும் தற்போது சீனாவில் நடக்க இருக்கும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தேர்வில் விருந்தினராகக் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும் மிஸ்டர் பீன் தெரிவித்துள்ளார். மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தன்னை பற்றி தவறானச் செய்திகள் பரப்பபடுவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாத்ததில் கூட இது போன்று செய்தி வெளியிடப்பட்டதாகவும் இது போன்று தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என்றும் மிஸ்டர் பீன் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com