Madharaasi, Conjuring, Bad Girl
Madharaasi, Conjuring, Bad GirlThis Weeks Release

மதராஸி முதல் ஸ்பைக் லீயின் Highest 2 Lowest வரை... இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

சிவகார்த்திகேயனின் மதராஸி முதல் ஸ்பைக் லீயின் Highest 2 Lowest வரையிலான இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட்.
Summary

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் பல்வேறு மொழிகளில் பல சுவாரஸ்யமான படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாகின்றன. சிவகார்த்திகேயனின் மதராஸி முதல் ஸ்பைக் லீயின் Highest 2 Lowest வரை பல வகை படைப்புகள் ரசிகர்களை கவரவிருக்கின்றன.

1. Series

Kammattam (Malayalam) Zee5 - Sep 5

Kammattam
Kammattam Kammattam

ஷான் துளசிதரன் இயக்கியுள்ள சீரிஸ் `Kammattam'. பொருளாதார குற்றம் ஒன்றை விசாரிக்கும் அதிகாரியின் கதை.

2. OTT

Inspector Zende (Hindi) Netflix - Sep 5

Inspector Zende
Inspector ZendeInspector Zende

மனோஜ் பாஜ்பாயாய் நடித்துள்ள படம் `Inspector Zende'. சீரியல் கில்லர் ஒருவன் சிறையில் இருந்து தப்பி மும்பை வர, அவனைப் பிடிக்க முயற்சிக்கும் ஷிண்டே என்ற அதிகாரியின் கதை.

3. Highest 2 Lowest (English) Apple tv+ - Sep 5

Highest 2 Lowest
Highest 2 LowestHighest 2 Lowest

Spike Lee இயக்கியுள்ள படம் `Highest 2 Lowest'.  Akira Kurosawa இயக்கிய High and Low படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது இப்படம். கடத்தல் ஒன்றால் மாறிப்போகும் சிலரின் வாழ்க்கை என்பதே படத்தின் கதை.

4. Post Theatrical Digital Streaming

Ice Road: Vengeance (English) Prime - Sep 3

Ice Road Vengeance
Ice Road VengeanceIce Road Vengeance

Jonathan Hensleigh இயக்கத்தில் லியம் நீல்சன் நடித்த படம் `Ice Road: Vengeance'. தன் சகோதரரின் அஸ்தியை கரைக்க செல்லும் பயணத்தில் ஹீரோவுக்கு ஏற்படும் ஆபத்துகளும் ஆக்ஷன்களுமே கதை.

5. Surrender (Tamil) Sunnxt - Sep 4

Surrender
SurrenderSurrender

கௌதமன் இயக்கத்தில் தர்ஷன், லால் நடித்துள்ள படம் `சரண்டர்'. எலக்ஷன் பின்னணியில் நிகழும் காவல்துறைக்கும் - கேங்க்ஸ்டருக்கு இடையே நடக்கும் மோதலே கதை.

6. Flask (Malayalam) manoramamax - Sep 4

Flask
FlaskFlask

ராகுல் இயக்கத்தில் சைஜூ குருப் நடித்துள்ள படம் `Flask'. நீதிபதி ஒருவரும், அவரது காவலரும் கடத்தப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் காமெடிகளே கதை.

7. Aankhon ki Gustaakhiyan (Hindi) Zee5 - Sep 5

Aankhon ki Gustaakhiyan
Aankhon ki GustaakhiyanAankhon ki Gustaakhiyan

சந்தோஷ் சிங் இயக்கத்தில் விக்ராந்த் மாஸே நடித்துள்ள படம் `Aankhon ki Gustaakhiyan'. காதல் ஜோடி ஒன்றிற்கு வரும் சிக்கலே கதை.

8. Theatre

Madharaasi (Tamil) - Sep 5

Madharaasi
MadharaasiMadharaasi

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் `மதராஸி'. ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

9. Bad Girl (Tamil) - Sep 5

Bad Girl
Bad GirlBad Girl

வர்ஷா பரத் நடித்துள்ள படம் `Bad Girl'. பதின் பருவ பெண் கடந்து வரும் உறவு சிக்கல்களே கதை.

10. Gandhi Kannadi (Tamil) - Sep 5

Gandhi Kannadi
Gandhi KannadiGandhi Kannadi

ஷெரிஃப் இயக்கத்தில் பாலா நடித்துள்ள படம் `காந்தி கண்ணாடி'. காந்தி என்ற பெரியவருக்கு ஹீரோவுக்குமான பாச பிணைப்பே கதை.

11. Ghaati (Telugu) - Sep 5

Ghaati
GhaatiGhaati

கிரிஷ் இயக்கத்தில் அனுஸ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள படம் `Ghaati'. கஞ்சா வளர்த்து விற்கும் ஒரு கும்பலுக்கு பின்னால் இருக்கும் அதிகார பின்னணிகளை பற்றி சொல்லும் கதை.

12. Little Hearts (Telugu) - Sep 5

Little Hearts
Little HeartsLittle Hearts

சாய் இயக்கியுள்ள படம் `Little Hearts'. ஒரு பெண்ணின் காதலுக்காக போராடும் இளைஞனின் கதை.

13. Elumale (Kannada) - Sep 5

Elumale
Elumale Elumale

புனித் ரங்கசாமி இயக்கியுள்ள படம் `Elumale'. தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் ஒரு பெண்ணும் - டாக்சி ஓட்டுநரும் சம்பந்தப்பட்ட சம்பவமே கதை.

14. Baaghi 4 (Hindi) - Sep 5

Baaghi4
Baaghi4Baaghi4

ஹர்ஷா இயக்கத்தில் டைகர் ஷெராஃப் நடித்துள்ள படம் `Baaghi 4'. நாயகனின் மிஷனும், அதை அவன் எப்படி முடிக்கிறான் என்பதுமே கதை.

15. The Bengal Files (Hindi) - Sep 5

The Bengal Files
The Bengal FilesThe Bengal Files

விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள படம் `The Bengal Files'. ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.

16. The Conjuring: Last Rites (English) - Sep 5

The Conjuring Last Rites
The Conjuring Last RitesThe Conjuring Last Rites

Michael Chaves இயக்கியுள்ள படம் `The Conjuring: Last Rites'. Ed and Lorraine Warren ஐ மையப்படுத்தி உருவாகும் கடைசி படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

17. Ufff Yeh Siyapaa (Hindi) - Sep 5

Ufff Yeh Siyapaa
Ufff Yeh SiyapaaUfff Yeh Siyapaa

அசோக் இயக்கத்தில் சோகும் ஷா நடித்துள்ள படம் `Ufff Yeh Siyapaa'. சைலன்ட் படமாக உருவான இதற்கு ஈ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வாய் பேச முடியாத மாற்றுத்தினாளி ஒருவர் மாட்டிக் கொள்ளும் பிரச்னையும், அதன் பின் நடக்கும் கலாட்டாக்களுமே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com