\
கசியும் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் திருமண தகவல்கள்! வைரல் ஆகும் புதிய புகைப்படம்

கசியும் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் திருமண தகவல்கள்! வைரல் ஆகும் புதிய புகைப்படம்

கசியும் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் திருமண தகவல்கள்! வைரல் ஆகும் புதிய புகைப்படம்
Published on

பாலிவுட் சினிமா நட்சத்திரங்களான நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷல் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது. இந்த நிலையில் கத்ரீனா கைஃப்பின் மும்பை - பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்து விக்கி கவுஷல் காரில் புறப்பட்டு செல்லும் படம் ஒன்றோ குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

இருவரும் அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப்பின் வீட்டில் இருந்து சென்ற படம் பேசு பொருளாகி உள்ளது.

இருவரும் சட்டப்படி முதலில் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய உள்ளதாகவும், அதையடுத்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com