MISSION IMPOSSIBLE The Final Reckoning review
Tom Cruise | MISSION IMPOSSIBLE The Final ReckoningParamount Pictures and Skydance

MISSION IMPOSSIBLE The Final Reckoning review | உலகை மீண்டும் காப்பாற்றினாரா டாம் க்ரூஸ்..?

இரண்டாம் பாதியில் வரும் அந்த நீர்மூழ்கி காட்சி தான், இந்தப் படத்துக்கான USP. பிரமாதப்படுத்தியிருக்கிறார் டாம் க்ரூஸ்.
Published on
MISSION IMPOSSIBLE The Final Reckoning(3.5 / 5)

AIயுடன் டாம் க்ரூஸ் ONE LAST TIME நடத்தும் யுத்தமே இந்த MISSION IMPOSSIBLE The Final Reckoning.

எத்தனையோ முடிக்கமுடியாத மிஷன்களை முடித்த டாம் க்ரூஸுக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று வருகிறது. அது கண்ணுக்குத் தெரியாத AI வில்லன்.  கதையின் மையம், ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) ஒரு தீய ஏஐ என்டிடியை (The Entity) கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இந்த பாகத்தில், சோர்ஸ் கோடை கைப்பற்றும் முயற்சியும், கேப்ரியல் என்ற வில்லனைத் தடுக்கும் போராட்டமும் முக்கியமாக வருகின்றன. பழைய பாகங்களுக்கான டிரிபூட்; முதல் பாகத்தை சாம்ர்த்தியமாக இணைத்தது போன்ற சில விஷயங்களுடன் இந்த பாகத்தை டாப் கிளாஸில் முடித்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் முகமூடியை வைத்து முகத்தை மாற்றும் டெக்னிக்கை அவர்களே ஜாலியாகத்தான் டீல் செய்கிறார்கள். அதனால், அந்த சம்பிரதாயக் காட்சி இந்தப் படத்திலும் உண்டு.  தற்போதைக்கு நம் உலகில் பீதியைக் கிளப்பும் AI தான் படத்திலும் வில்லன். கண்ணுக்குத் தெரியாத அந்த வில்லனை சமாளிக்க என்ன செய்கிறார்கள் என்கிற கதை ஒரு பக்கமும்; கடைசி பாகம் என்பதால் டாம் க்ரூஸுக்கும் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸுக்குமான டிரிபூட் இன்னொரு பக்கமும் என சரியான கலவையில் கலந்து கொடுத்திருக்கிறார்கள். படையப்பாவில் அப்பாஸ் ரஜினியைப் பார்த்து, Whattey Man என்பாரே அதற்கு 100% பொருந்திப் போகும் நபர் என்றால் அது டாம் க்ரூஸ் தான். அறுபது வயதைக் கடந்துவிட்டார், ஆனாலும் ஆகாயத்தைத் தொட்டுவிட்டு திரும்புவதில் அவர்க்கு இருக்கும் ஆர்வம் குறைவே இல்லை. இந்த முறை தண்ணிருக்குள் மிக நீளமான ஒரு காட்சி. அநாயசமாக நடித்திருக்கிறார். கடந்த பாகத்தில் வந்த Pom Klementieffக்கு இதிலும் கனமான வேடம். MCUவில் மேன்ட்டிஸாக வந்து ரசிகர்களை பெற்றவர், இதில் அதிரடியில் அசரடிக்கிறார். 

Pom Klementieff
Pom KlementieffPhoto Credit: Antonio Olmos

படத்தின் முதல் பாதி மிக நீளமான வசனங்களும், குழப்பமான விளக்கங்களும் நிறைந்துள்ளது. Entity பற்றிய விளக்கங்கள் சிக்கலாகவும், திரும்ப திரும்ப சொல்லப்படுவதால் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள், கேமரா, இசை, ஒளிப்பதிவு ஆகியவை மிக உயர்ந்த தரத்தில் உள்ளன. ஆனால், 169 நிமிடங்கள் ஓடும் படத்தில், கதையின் வேகம் இடையே குறைந்து விடுகிறது. முந்தைய பாகங்களில் இருந்த சுவாரஸ்யம், இந்த பாகத்தில் குறைவாகவே உள்ளது.

முந்தைய பாகங்கள் அளவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒரு நல்ல ட்ரிப்யூட்டாக இப்படம் அமைந்துள்ளது. முந்தைய பாகங்களை பார்க்கவில்லை என்றாலுமே, இந்தப் பாகம் எளிதாகப் புரியும் என்பதால், தாராளமாக அனைவரும் இந்த படத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com