\
Evil Dead Burn Review
Sébastien VaničekEvil Dead Burn Review

பதறவைக்கும் ஹாரர் படமாக ஈர்க்கிறதா? | Evil Dead Burn Review | Sébastien Vaniček

கடந்த பாகமான Evil Dead Rise படத்தின் அதே செட்டப்பில் தான் இந்த பாகத்தை இயக்கியுள்ளார் செபாஸ்டியன் வானிசெக்.
Published on
பதறவைக்கும் ஹாரர் படமாக ஈர்க்கிறதா?(1.5 / 5)

பழிவாங்க வரும் தீய சக்தியிடமிருந்து தப்பிக்க துடிக்கும் குடும்பத்தின் கதையே Evil Dead Burn.

தன் தாத்தா பெஞ்சமினின் ஆராய்ச்சியான Book of the Dead பற்றி படிக்கும் ஜோசப், அவர் மறைத்து வைத்திருந்த ஒரு பொருளை வெளியே எடுக்கிறார். அதனால் Deadites என்ற தீய சக்தி வெளியே வருகிறது. சென்ற பாகத்தில் இறந்த ஜெஸ்ஸிகா உடலில் புகுந்த அந்த தீய சக்தி, வில் என்பவரை கொலை செய்து அவர் உடலில் புகுந்து அவரையும் Deadites ஆக்குகிறது. இந்த வில் தான், தாத்தாவின் ஆராய்ச்சியை படித்து கொண்டிருந்த ஜோசப்பின் அண்ணன். வில் உடலுக்குள் புகுவது மூலமாக அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் எப்படி தாக்குகிறது இந்த தீய சக்தி, அதற்கான காரணம் என்ன? இதை எல்லாம் சொல்வது தான் Evil Dead Burn.

Evil Dead Burn
Evil Dead Burn
Evil Dead Burn Review
ஸாரா பாப்பா ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க! - கட்டா குஸ்தி 2வுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

கடந்த பாகமான Evil Dead Rise படத்தின் அதே செட்டப்பில் தான் இந்த பாகத்தை இயக்கியுள்ளார் செபாஸ்டியன் வானிசெக். ஒவ்வொரு கொலைகளும் எப்படி நடக்கிறது என்பதில் குரூரத்தை கூட்டி இருக்கும் விதம் பயங்கரம். வன்முறை விரும்பிகளுக்கு இது போன்ற காட்சிகள் திருப்தியை கொடுக்கலாம். இந்த பட வரிசையிலேயே அதிகப்படியான வன்முறை உள்ள படம் இது தான். அந்த அளவுக்கு காரில் நடக்கும் ஒரு மோதல், சிம்லியில் நடக்கும் மோதல் ரத்த சகதியாக முடியும் இடம் என ஒவ்வொரு விதமான தாக்குதலையும் தரமாக வடிவமைத்திருந்தனர்.

Evil Dead
Evil Dead

வன்முறையான மேக்கிங் தாண்டி இதில் சொல்லிக் கொள்ளும்படி எந்த விஷயமும் இல்லை. வெறும் ரத்தக்களரியை வைத்தே பயமுறுத்த நினைத்திருக்கிறார்களே தவிர, இயல்பாக எந்த பதைபதைப்பையும் படம் ஏற்படுத்தவில்லை. மேலும் இவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என பதறும் அளவுக்கு படத்தின் கதாபாத்திரங்களும் யாரும் நல்லவர்களாக இல்லை. மேலும் லாஜிக் விஷயமாக பார்த்தாலும், ஒரு பாத்திரத்திற்கு தப்பி செல்ல வாய்ப்பு கிடைத்தும் அவர் தப்பிக்காதது, அவ்வளவு சக்தி படைத்த Deaditesக்கு ஒரு பொருளை எப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என பல கேள்விகள் எழுகின்றன.

மொத்தத்தில் பேய் படத்துக்கான எந்த சிறப்பம்சமும் இல்லாமல், ஒரு ஸ்லாஷர் த்ரில்லர் லெவல் படமாக மட்டும் இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com