Pawan Kalyan
Pawan KalyanBRO

BRO REVIEW | இதுதான் அந்த திரைக்கதை மாற்றமா ப்ரோ..?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை திரைக்கதை என நாம் புரிந்து கொள்ள வேண்டியது மூன்று விஷயங்கள்.
BRO(1.5 / 5)

நேரம் இல்லை என ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு இன்னும் 90 நாள் தான் உயிரோடு இருக்க முடியும் என்ற நிலை வந்தால்?

மார்கண்டேயன் aka மார்க் (சாய் தரம் தேஜ்) ஒரு டெக்ஸ்டெயில் நிறுவனத்தில் AGM ஆக பணிபுரிகிறார். GM ஆகும் கனவுடன் உழைக்கிறார். பணம் சம்பாதிப்பது, குடும்பத்தை கரை சேர்ப்பது தான் வாழ்க்கையின் லட்சியம் என ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு விஷயங்களில் தீவிரமான நம்பிக்கை. தான் இல்லாவிட்டால் குடும்பம் நிர்கதி ஆகிவிடும். இன்னொன்று தான் இல்லாவிட்டால் தான் பணியாற்றும் நிறுவனமே இயங்காது. நேரம் இல்லை நேரம் இல்லை என ஓடிக் கொண்டிருக்கும் மார்க், எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார். விழித்துப் பார்க்கும் அவர் முன் அந்த நேரமே ஒரு மனித (பவன் கல்யாண்) உருவில் தோன்றுகிறது. தான் இல்லாவிட்டால் குடும்பமும், பணியாற்றும் நிறுவனமும் தன்னுடைய GM கனவு எல்லாமும் தகர்ந்து போகும் என நேரத்திடம் முறையிடுகிறார். சரி மார்க்கிற்கு ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கிறது. 90 நாட்கள் கெடு, அதற்குள் அவர் முடிக்க வேண்டிய பணிகளை முடிக்க வேண்டும். இதன் பின் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

2021ல் சமுத்திரக்கனி `விநோதய சித்தம்’ என்ற நாடகத்தை தழுவி அதே பெயரில் படத்தை இயக்கியிருந்தார். அதன் தெலுங்கு ரீமேக் தான் `ப்ரோ’. ஆனால், பவன் கல்யாண் போன்ற மாஸ் ஹீரோவை நடிக்க வைப்பதால் கதையில் எக்கச்சக்க மாற்றங்கள். விநோதய சித்தம் கதைக் களத்தின் பலமே அதன் ஃபேன்டசி கலந்த கான்செப்ட். கூடவே ”நீ இல்லாவிட்டால் உலகமே நின்றுவிடுமா?” என்ற கேள்விதான் மொத்தக் கதையுமே. அதையே ரீமேக்கிலும் அப்படியே கொண்டு வந்திருப்பது சிறப்பு. படத்தின் ஒரு சுவாரஸ்யமான விஷயம் முதன்மைக் கதாபாத்திரங்களின் பெயர்கள். சாய் தரம் தேஜ் கதாபாத்திரப் பெயர் மார்கண்டேயன் (இந்து புராணங்களின் படி மார்கண்டேயன் சீக்கிரமே இறந்துவிடுவார் என சொல்லப்படும்.) பவன் கல்யாணின் கதாபாத்திர பெயர் Titan. (பிரபலமான வாட்ச் ப்ராண்ட் என்பதல்ல விஷயம். Titan என்றால் மிக முக்கியமானது என்று பொருள்). படத்தின் கதையை சுருக்கமாக இந்தக் கதாபாத்திரங்களில் பெயரில் பிரதிபலித்திருக்கும் ஐடியா சூப்பர். ஆனால் இந்த புத்திசாலித்தனம் படம் முழுக்க இல்லை என்பதுதான் சோகம்.

Pawan Kalyan
LGM Lets get Married திரை விமர்சனம் | 'மனித உயிர்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா'
Pawan Kalyan
Oppenheimer விமர்சனம் : எல்லோரின் கைகளிலும் படிந்த ரத்தம்... Oppenheimer ஒரு பார்வை..!
Pawan Kalyan
DD Returns Review | நம்மள சிரிக்க வைக்குற சந்தானம் மீண்டும் ரிட்டர்ன்ஸ்..!

விநோதய சித்தத்தை தெலுங்கு படமாக மாற்ற சமுத்திரக்கனி, ஸ்ரீவத்சன், விஜி என மூவர் கதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் படத்தைப் பார்த்தால் மூன்று பேர் மெனக்கெட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லா காட்சிகளும், எல்லா வசனங்களும் ஒரு சீரியல் பார்ப்பதைப் போன்ற உணர்வையே கொடுக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை திரைக்கதை என நாம் புரிந்து கொள்ள வேண்டியது மூன்று விஷயங்கள்.

1. இந்தக் கதைக்குள் எங்கெங்கு பாடல்களை வைப்பது. Foreign song, club song, set song மற்றும் ஊர்வஷி ரௌடலா வரும் பாடல். இவற்றை வற்புறுத்தி கதைக்குள் செருகுவது திரைக்கதை.

2. பவன் பல்யாணின் பழைய படங்களுடைய Referenceஐ படத்திற்குள் சேர்ப்பது. Thammudu, Jalsa, Tholiprema, Beemla Nayak போன்ற படங்களின் Referenceஐ வசனமாகவோ, பாடலாகவோ படம் நெடுக கொண்டு வருவது திரைக்கதை.

3. இந்தக் கதையை பவன் கல்யாண் போன்ற மாஸ் ஹீரோவுக்கு தகுந்தது போல மசாலா சேர்த்து தருவது. உதாரணமாக படத்தின் இடைவேளைக் காட்சியில் கேலக்ஸியில் பவன் கல்யாண் இருப்பார். அவர் முன் இருக்கும் பூமிப்பந்தின் மீது காலை வைத்தபடி படத்திற்கு இண்டர்வெல் விடுவார்கள். இதுவும் திரைக்கதை.

படத்தில் நல்ல காட்சிகளோ, திரைக்கதையோ தான் இல்லை என நினைத்தால், நடிப்பும் சுமார் ரகம் தான். பவன் கல்யாண் படம் முழுக்க charm ஆக இருக்க முயற்சிக்கிறார். அவரது முந்தைய சில படங்களில் அவர் அப்படி நடித்தது நன்றாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் எடுபடவில்லை. சாய் தரம் தேஜ் எமோஷனலாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதுவும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இது தவிர பல நடிகர்கள் இருக்கிறார்கள், சமுத்திரக்கனி, பிரம்மானந்தம் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள். ஆனால் அனைவரின் நடிப்பும் ஒரு சீரியல் தன்மையிலேயே இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக சுஜீத் வாசுதேவ் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. ஆனால் படத்தின் மோசமான சிஜி அதில் ஒரு திருஷ்டியாக உருத்துகிறது. தமனின் பின்னணி இசைதான் படத்தை ஓரளவு தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் பாடல்கள் பொறுத்தவரை தமனும் நம்மைக் கைவிடுகிறார்.

மொத்தத்தில் Bro ஒரு வலுவான கதையுடன் இருக்கிறது, ஆனால் பவன் கல்யாணின் மாஸும், அவரது முந்தைய படங்களின் ரெஃபரன்ஸுமே திரையை ஆக்கிரமித்துக் கொள்வதால் கதை காணாமல் போகிறது. விநோதய சித்தம் சிறந்த படமா, Bro சிறந்த படமா எனக் கேட்டால், இரண்டிலும் அதனதன் அளவில் குறைகள் உண்டு. ஆனால் Bro படத்தில் உள்ள குறைகளின் பட்டியல் மிக நீளம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com