Antoine Fuqua's Michael Review
Antoine FuquaMichael

படம் அல்ல கான்சர்ட்.. எப்படி இருக்கு மைக்கேல் ஜாக்சன் பயோபிக்? | Michael Review | Antoine Fuqua

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை டாக்குமென்டரியாக, தொடராக வந்திருந்தாலும் சினிமாவாக வருவது இதுவே முதல் முறை.
Published on
படம் அல்ல கான்சர்ட்... எப்படி இருக்கு மைக்கேல் ஜாக்சன் பயோபிக்?(2 / 5)

மைக்கேல் ஜாக்சனின் 5 முதல் 27 வயது வரையிலான வாழ்க்கையே `மைக்கேல்'

1966இல் ஐந்து வயதான மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் இருந்து துவங்குகிறது கதை. ஜோசப் ஜாக்சன் அவரது மகன்கள் ஐவரை இணைத்து `ஜாக்சன் 5' என்ற இசைக்குழுவை உருவாக்குகிறார். மகன்களை வற்புறுத்தி பல்வேறு இடங்களுக்கு சென்று இசைக்கச்சேரிகளை நடத்தி வாழ்க்கையை ஓட்டுகிறார் ஜோசப். ஆனால் இயற்கையாகவே மைக்கேலிடம் ஓர் அதீத இசை திறமை இருப்பதைக் கண்டுகொள்கிறார். ஒருபக்கம் இசை, நடனம் எனப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என மைக்கேல் முயல, அதை எல்லாம் எப்படி காசாக்குவது என திட்டமிடுகிறார் ஜோசப். சிறுவயது முதலே தந்தையின் கட்டுப்பாடுகளில் வளரும் மைக்கேல், அவர் பிடியிலிருந்து வெளிவர துடிக்கிறார். இதன்பின் மைக்கேலின் இசைப்பயணம் என்ன ஆனது? தந்தையிடம் இருந்து தப்பினாரா? இதை எல்லாம் சொல்கிறது `மைக்கேல்'.

Michael
Michael

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை டாக்குமென்டரியாக, தொடராக வந்திருந்தாலும் சினிமாவாக வருவது இதுவே முதல் முறை. 1966 - 1988 வரையில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை வரிசைப்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர் John Logan. அதனை MJ-ன் அட்டகாசமான பாடல்களை பயன்படுத்தி சிறப்பான திரை அனுபவத்தை கொடுக்க உழைத்திருக்கிறார் இயக்குநர் Antoine Fuqua.

Antoine Fuqua's Michael Review
அன்று ரஜினி, இன்று ஷாரூக்... மிஸ்ஸான வாய்ப்பு! | Jailer 2 | Ra One

நடிப்பாக சிறுவயது மைக்கேலாக வரும் Juliano Krue Valdi அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குழந்தைத்தனத்துடன் பேசுவதும், துள்ளலாக ஆடிப் பாடுவதும், அப்பாவுக்கு பயந்து நடுங்குவதும் எனக் குறைவான நேரம் வந்தாலும் பிரமாதம். இளம் வயது மைக்கேலாக Jaafar Jackson கிட்டத்தட்ட மைக்கேலை அப்படியே பிரதிபலிக்கிறார். நடனம் அத்தனையும் அட்டகாசம். மைக்கேலின் தந்தையாக வரும் Colman Domingo நடிப்பு மிக அழுத்தமாக இருக்கிறது. தாயாக வரும் Nia Long, மேனேஜராக வரும் Miles Teller, பாதுகாவலராக வரும் KeiLyn Durrel Jones ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.

Michael
Michael

பாப் இசை மன்னனின் வாழ்க்கை கதை என்பதால் இசைதான் இப்படத்தின் மையச்சரடு என்பதால் ஆரம்ப காலம் முதல் மைக்கேலின் இசைப் பயணப் பாடல்கள் அத்தனையும் படத்தில் மிக அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடல்களும், அவை படமாக்கப்பட்ட விதமும்தான் இப்படத்தின் முதல் ப்ளஸ். ஒவ்வொரு பாடல்களும் வரும் இடமும் படம்போல அல்லாமல், கிட்டத்தட்ட ஒரு லைவ் கான்சர்ட் பார்க்கும் அனுபவத்தைத்தான் இருக்கிறது. அத்தனை துள்ளல்.

மைக்கேல் ஜாக்சனின் வளர்ச்சியையும், குடும்பம் சார்ந்து அவருக்கு இருந்த நெருக்கடிகளையும் ஒருசேர பதிவுசெய்ய நிலைத்திருக்கிறது இந்தப் படம். அதில் பாதி வெற்றி என்று சொல்லலாம். ஒரு சிறுவனின் அபாரமான திறமையை ஆச்சர்யமாக பார்ப்பதில் துவங்கும் கதை, அவனின் அற்புதமான ஒரு மேடை நிகழ்வுவரை சொல்லப்படுகிறது. இப்படத்தில் இசை சார்ந்து சொல்லப்படும் ஜாக்சனின் கதை மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவே அவரின் குடும்பம் சார்ந்த கதையில் எந்த எமோஷனல் கனெக்டும் இல்லாமல் இருக்கிறது என்பதுதான் பிரச்னை. மருத்துவமனையில் தன் தாயுடன் ஜாக்சன் பேசும் ஓர் இடம் மட்டும் உணர்வுபூர்வமாக இருந்தது.  இத்தனைக்கும் தந்தையைப் பிரிய நினைக்கும் ஜாக்சன் என்பதற்குள்ளேயே பல டிராமா இருந்தும், அது மிக மேலோட்டமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே படத்தில் உயிரோட்டமே இல்லை. மேலும் படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்கும் நோக்கம் இருப்பதால், தேவை இல்லாமல் படத்தை இழுத்தடித்து கதை சொல்லப்படுகிறது.

Antoine Fuqua
Antoine FuquaMichael

மொத்தத்தில் ஒரு சுமாரான பயோபிக்தான் இது. ஆனால் மைக்கேலின் பாடல்களுக்கு நீங்கள் ரசிகர் என்றால் தியேட்டரில் ஓர் இசை விருந்து இருக்கிறது. ஆனால், படமும் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால், ஏமாற்றம் ஏற்படலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com