28 Years Later  Movie review
28 Years Later 28 Years Later

28 Years Later | ஐஃபோன் 15ல் எடுக்கப்பட்ட ஜோம்பி சினிமா... த்ரில்லராய் ஈர்க்கிறதா..?

வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படம் பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் டேனி பாயிலின் இந்த 28 Years Later படத்தினை விசிட் செய்யலாம். முந்தைய பாகங்களை கட்டாயம் பார்த்திருக்க தேவையில்லை என்பது கூடுதல் பிளஸ்.
Published on
28 Years Later(3.5 / 5)

ஜோம்பி சூழ் உலகில், தாயைக் காப்பாற்ற மகன் மேற்கொள்ளும் போராட்டமே 28 Years Later படத்தின் ஒன்லைன். 

ரேஜ் வைரஸ் தாக்குதலால் ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. ஒரு சிறு குழு மட்டும் லிண்டிஃபார்ன் என்கிற தீவில் வசிக்கிறார்கள்.இவர்களின் தீவையும் ஜோம்பிக்கள் இருக்கும் பகுதியையும் பெரும் நதி ஒன்று பிரிக்கிறது. தீவில் ஜெய்மியும், ஜெய்மியின் 12 வயது மகன் ஸ்பைக், நோய்வாய்ப்பட்ட ஜெய்மியின் மனைவியும் வசிக்கிறார்கள். 'ஸ்பைக்'கின் வயசுக்கு வந்த டேவை முன்னிட்டு அவனை நகருக்குள் அழைத்துச்செல்ல திட்டமிடுகிறான் ஜெய்மி. காலச்சூழலில் ஜோம்பிக்களும் மாறிவிடுகிறார்கள். ரேஜ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஜோம்பிகளும் குடும்பமாக வாழ்கிறார்கள்; அவர்களுக்கென ஒரு ஆல்ஃபா இருக்கிறார். இவர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் தங்கள் தீவுக்கு வருகிறார்கள் ஜெய்மியும், ஸ்பைக்கும். நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைக் காப்பாற்ற மீண்டும் நகருக்குள் செல்ல ஆயுத்தமாகிறான் ஸ்பைக். அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், போராட்டங்களுமே 28 Years laterன் மீதிக்கதை.

Shallow Grave , TrainSpotting போன்ற திரைப்படங்கள் மூலம் உலகெங்கிலும் அறியப்பட்ட இயக்குநர் டேனி பாயில். 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். இவர் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான படம் தான் 28 Days Later. சிலியன் மர்ஃபியின் நடிப்பில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. இதன் சீக்குவலான 28 Weeks Later படம் 2007ம் ஆண்டு வெளியானது. இவற்றை டேனி பாயில் ஜோம்பி படங்கள் என அழைப்பதை விரும்புவதில்லை என்பது தனிக்கதை. 

28 years Later
28 years Later

முதல் பாகத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் நகரத்து வீதிகளில்  Canon XL1 digital video கேமராவில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் Anthony Dod Mantle. பெரிய கேமராக்கள் இல்லாமல், சின்ன கேமராக்களின் மூலம் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். 70 வயதை நெருங்கும் டேனி பாயில் இந்த மூன்றாம் பாகத்தில் செய்திருப்பது இன்னுமொரு அசாதாரண முயற்சி. இந்தப் பாகத்தின் பெரும்பான்மையான காட்சிகளை ஐஃபோன் 15 PRO MAX கேமராவில் படம் பிடித்திருக்கிறார்கள். இதையும் Anthony Dod Mantle தான் சாத்தியப்படுத்தியிருக்கிறார். ஐமேக்ஸ் கேமராக்களில் விசுவல் பிரமாண்டம் யோசிக்கும் சூழலில் ஐஃபோனில் ஜோம்பி படத்தை எடுத்து மிரட்டியிருக்கிறார் டேனி பாயில். ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு பெரிய களமோ, கதை மாந்தர்களோ, டெக்னாலஜியோ தேவையில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் டேனி பாயில். ஆனால், இதில் வந்திருக்கும் அவுட்புட்டிற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன. சில காட்சிகள் போதிய டெப்த் இல்லாமல் இருப்பதால், பெரிதாக கனெக்ட் ஆக மறுக்கின்றன. அதே போல் ரேல்ஃப் ஃபெயின்ஸின் மருத்துவர் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்படவில்லை. இவை இரண்டு மட்டுமே சிறு குறைகள்.

Young Fathersன் குழுவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். பின்னணி இசை வழியாக ஒரு மார்ச் பாடலைப் போல வந்து மக்களின் பூர்விகக் கதை சொல்லும் பாடல் சிறப்பு. பிற ஜோம்பி படங்களைப் போல் அல்லாமல், இதில் புதுவிதமாக சில விஷயங்களை சேர்த்திருப்பதும் சிறப்பு. 

வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படம் பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் டேனி பாயிலின் இந்த 28 Years Later படத்தினை விசிட் செய்யலாம். முந்தைய பாகங்களை கட்டாயம் பார்த்திருக்க தேவையில்லை என்பது கூடுதல் பிளஸ்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com