\
இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாகும் பிரச்னை: சர்வர்களை முடக்க கோரிக்கை

இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாகும் பிரச்னை: சர்வர்களை முடக்க கோரிக்கை

இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாகும் பிரச்னை: சர்வர்களை முடக்க கோரிக்கை
Published on

திரைப்படங்களை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட உதவும் அமெரிக்க சர்வர்களை முடக்க அந்நாட்டு அதிபரிடம் முறையிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. 

சினிமாவிற்கு எதிரானதாக விஸ்வரூபமெடுத்து வரும் 'பைரஸி' பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் சங்கம் ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், கையெழுத்து நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அமெரிக்க அதிபரின் கவனம் பெற்றால், சட்டப்பூர்வமற்ற முறையில் இயங்கும் சர்வர்களை முடக்க முடியும். அதனால், செப்டம்பர் 27ம் தேதிக்குள் 1 லட்சம் கையெழுத்துகளைப் பெறத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com