\
இன்று மீண்டும் ரிலீஸ்: இவன் தந்திரன், வனமகன் டீம் மகிழ்ச்சி!

இன்று மீண்டும் ரிலீஸ்: இவன் தந்திரன், வனமகன் டீம் மகிழ்ச்சி!

இன்று மீண்டும் ரிலீஸ்: இவன் தந்திரன், வனமகன் டீம் மகிழ்ச்சி!
Published on

வேலை நிறுத்தத்துக்குப் பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்படுவதால் இவன் தந்திரன் மற்றும் வனமகன் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரட்டை வரிக்கு எதிராக கடந்த திங்கள் கிழமை முதல் தியேட்டர்கள் முடப்பட்டிருந்தன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இவன் தந்திரன், அதாகப்பட்டது மகாஜனங்களே உள்ளிட்ட படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இவன் தந்திரன் படத்துக்கு விமர்சனங்கள் நன்றாக வந்துகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ஸ்டிரைக்கால் வசூல் பாதிக்கப்பட்டதாக, அதன் இயக்குனர் ஆர்.கண்ணன் கவலைத் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இவன் தந்திரன், வனமகன் படக் குழு, தங்கள் படங்கள் இன்று முதல் மீண்டும் திரையிடப்படுகின்றன. கண்டிப்பாக வரவேற்பை பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர்.

மேலும், இந்த வாரம் வெளியாக இருந்த விக்ரம் வேதா, பண்டிகை, திரி ஆகிய திரைப்படங்களின் வெளியீடு அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com