\
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? மொட்டை ராஜேந்திரனும் இந்தா கிளம்பிட்டாருல்ல ..

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? மொட்டை ராஜேந்திரனும் இந்தா கிளம்பிட்டாருல்ல ..

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? மொட்டை ராஜேந்திரனும் இந்தா கிளம்பிட்டாருல்ல ..
Published on: 

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து இருக்கிறார் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன்.
சினிமாவில் ஸ்டண்ட்மேனாக இருந்து நான் கடவுள் படத்தின் வில்லனாக அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். அதன்பிறகு காமெடியனாக பல படங்களில் நடித்து வருகிறார். 
அரைடஜன் படங்களுக்கும் மேல் பிஸியாக நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார்.  இந்தப் படத்தில் கிராமத்து பண்ணையாராகவும் நடித்துள்ளார்.  கல்லூரி அகில், அவருக்கு ஜோடியாக ’கமருகட்டு’ சஹானா, மனோபாலா, கெளசல்யா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை வர்ஷன் இயக்கியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com