விஜய்யின் ‘பீஸ்ட்’ Vs அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் எது அதிக வியூஸ் - ரசிகர்கள் ட்ரோல்!

விஜய்யின் ‘பீஸ்ட்’ Vs அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் எது அதிக வியூஸ் - ரசிகர்கள் ட்ரோல்!
விஜய்யின் ‘பீஸ்ட்’ Vs  அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் எது அதிக வியூஸ் -  ரசிகர்கள் ட்ரோல்!

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர், விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ட்ரெயிலரின் சாதனையை முறியடித்துவிட்டதாகவும், அதேநேரத்தில் அப்படியெல்லாம் முறியடிக்கவில்லை என்றும் வழக்கம்போல் இருவரின் ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அஜித்தின் 61 படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம், (டிசம்பர் 31-ம் தேதி, 2022) இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லரைக் கண்டு அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீசுடன் ஒப்பிடுகையில், ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வெளியாகி 24 மணிநேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதுடன், 2.2 மில்லியன் லைக்குகளும் கிடைத்தது. மேலும் தென்னிந்திய திரைப்படங்களில் அதிவேகத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையைப் பெற்றது.

ஆனால், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் 24 மணிநேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களையும், 1.1 மில்லியன் லைக்குகளையுமே பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் சாதனையை, ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லரால் முறியடிக்க முடியவில்லை என்று விஜய் ரசிகர்கள் ச்மூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதேநேரத்தில் ‘துணிவு’ படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், 24 மணிநேரத்திற்குள் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை டேக் செய்து, மாலை 7 மணிக்கு பார்க்கும்போதுகூட 25 மில்லியன் பார்வையாளர்கள்தான் இருந்தது என்றும், நள்ளிரவு 12 மணிக்கு தான் 31 மில்லியன் வந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஹெச் வினோத் இயக்கியிருக்கும் ‘துணிவு’ படத்தை, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமையத்துள்ள இந்தப் படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, ஜி.எம். சுந்தர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com