நயன்தாராவை பின்னுக்கு தள்ளி ஓவியா முதல் இடம்

நயன்தாராவை பின்னுக்கு தள்ளி ஓவியா முதல் இடம்

நயன்தாராவை பின்னுக்கு தள்ளி ஓவியா முதல் இடம்
Published on

டாப் 30 விரும்பமான பெண்கள் பற்றிய சர்வேவில் நடிகை ஓவியா முதல் இடத்தை பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியாவுக்கு ஏறுமுகம்தான். நாளுக்கு நாள் அவரது புகழ் வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு ஆங்கில பத்திரிகை கடந்த 2017ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் யார்? என ஒரு சர்வே நடத்தியுள்ளது. அதில் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தட்டி ஓவியா சென்றுள்ளார். கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த நயன், இந்தக் கருத்துக் கணிப்பில் இரண்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளார். மூன்றாம் இடத்தை ரகுல் ப்ரித் சிங்கும், நான்காம் இடத்தை ஷரத்தா சஷிதர் வந்துள்ளார். முன்பு 6வது இடத்தில் காஜல் அகர்வால் 5 இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 

அதேபோல 16வது இடத்தில் இருந்த ஹன்சிகா 30 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளார். ஆகவே அவரது மார்க்கெட் அளவு மிகவும் சரிவை அடைந்துள்ளது. 13 இடத்தில் இருந்த அமலா பால் இம்முறை 28க்கு தள்ளப்பட்டுள்ளார். 10வது இடத்தில் இருந்த த்ரிஷா 23வது இடத்திற்கு இறங்கியுள்ளார். 7வது இடத்தில் இருந்த கீர்த்தி சுரேஷ் 15க்கும், 9வது இடத்தில் அனுஷகா 14க்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயத்தில் கடந்த முறை 20ல் இருந்த ஆண்ட்ரியா, இந்த முறை 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 4ல் இருந்த எமி ஜாக்சன் 6க்கு வந்துள்ளார்.

இந்த சர்வே குறித்து ஓவியாவுக்கு தெரியப்படுத்திய போது அவர் “என்னால நம்ம முடியல” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com