’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாராவின் கலர்ஃபுல் காஸ்டியும் டிசைனர் யார் தெரியுமா?

’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாராவின் கலர்ஃபுல் காஸ்டியும் டிசைனர் யார் தெரியுமா?

’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாராவின் கலர்ஃபுல் காஸ்டியும் டிசைனர் யார் தெரியுமா?
Published on

அம்மன் படங்கள் என்றாலே முகம் எது நெற்றி எது என்று தெரியாத அளவிற்குப் பொட்டு, கண்களை உறுத்தும் மேக்கப், உடல் முழுக்க நகைகள், முகம் முழுக்க மஞ்சள் என்று பார்ப்பவர்களைப் ரசிக்க வைக்காமல் பக்தியில் பயமுறுத்தச் செய்யும் படங்களே வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த தீபாவளியன்று வெளியான ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா பயமுறுத்தவில்லை.

மாறாக, ரசிக்க வைத்தார்.  கண்ணை உறுத்தாத அவரது கலர்ஃபுல் காஸ்டியூம்கள் மாஸ்டியூம்கள் என்று சொல்ல வைத்தவர், பிரபல காஸ்டியூம் டிசைனர் அனுவர்தன். அவரின் ரசனைமிக்க உடை, நகைத் தேர்வுகளே நாயன்தாராவை ரசிக்க வைக்கவும் படம் வெற்றியடைய காரணங்களில் ஒன்றாகவும் இருந்தது.

(அனு வர்தன்)

அம்மனாக நடித்தாலே பெரும்பாலும் மஞ்சள் , சிவப்பு புடவைகள்தான் கட்டிக்காட்டுவார்கள். ஆனால், இப்படத்தில், பச்சை, அடர் சிவப்பு, கருப்பு, ரோஸ் கலர், ஆரஞ்ச் என வெரைட்டி காட்டியதோடு நயன்தாராவுக்கு குறைவான நகைகளை கொடுத்து பேரழகாக காட்டினார் அனுவர்தன். இதனால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆர்.ஜே பாலாஜியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அனுவர்தன் சிறந்த பங்களிப்பை வழங்கினார்’ என்று பாராட்டியுள்ளார்.

இயக்குநர் விஷ்ணு வர்தனின் மனைவியான அனுவர்தன் அஜித்தின் பில்லா, விவேகம், விஸ்வாசம், விஜய்யின் பிகில், ரஜினியில் கபாலி, காலாவில் பணியாற்றியுள்ளார். நயன்தாராவின் கோலமாவு  கோகிலா படத்திற்கும் இவரே காஸ்டியூம் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com