'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரிஸ் சீசன் 5 - முதல் பகுதி செப்.3, அடுத்த பகுதி டிச.3-ல் ரிலீஸ்
பிரபல வெப் சீரிஸ் ஆன 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் 5-ஆவது சீசன் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆவது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்ட 'மணி ஹெய்ஸ்ட்' தொடருக்கு உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ஏற்கெனவே நான்கு சீசன்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் கடைசி மற்றும் 5 ஆவது சீசன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆவது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.