\
‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த மலையாள பிரபலம்? - வெளியான அப்டேட்

‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த மலையாள பிரபலம்? - வெளியான அப்டேட்

‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த மலையாள பிரபலம்? - வெளியான அப்டேட்
Published on

நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல மலையாள நடிகரான விநாயகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு வெளியான ‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

நீண்டகால மாதங்களாக கதை தயாரிக்கும் பணி நடைபெற்றுவந்தநிலையில், நேற்று சென்னையில் படப்பிடிப்பு துவங்கியது. இதனை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தின் சண்டைக்காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின், ஸ்டீவன் ஆகியோர் பணியாற்றவுள்ளனர். இந்தப் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் இந்தப் படத்தில் மலையாள திரையுலகில் திறமை வாய்ந்த நடிகர், பாடகர் என அறியப்படும் விநாயகன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே, தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்புவின் ‘சிலம்பாட்டம்’, கார்த்தியின் ‘சிறுத்தை’, தனுஷின் ‘மரியான்’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதேபோல், ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா சிறுகதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com