\
ஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத்து

ஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத்து

ஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத்து
Published on: 

வருமானவரித்துறை சோதனை காரணமாக ஜாஸ் சினிமாசுக்கு சொந்தமான திரையரங்குகளில் இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் 187 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீடு, வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  

வருமான வரித்துறையினரின் சோதனை காரணமாக சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் நேற்று மதியம் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் சோதனை தொடர்வதால் ஜாஸ் சினிமாசுக்கு சொந்தமான திரையரங்குகளில் இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய காட்சிக்காக முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com