மோகன்லால் இயக்கும் படத்தில் ஸ்பானிஸ் நடிகர்கள்!

மோகன்லால் இயக்கும் படத்தில் ஸ்பானிஸ் நடிகர்கள்!

மோகன்லால் இயக்கும் படத்தில் ஸ்பானிஸ் நடிகர்கள்!
Published on

நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்குனர் ஆகிறார். அவர் இயக்கும் படத்தில் ஸ்பானிஷ் நடிகர்கள் நடிக்கின்றனர்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். சுமார் 340 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் முதன்முறையாக இயக்குனர் ஆக இருக்கிறார். அவர் இயக்கும் படத்துக்கு பாரூஸ் (Barroz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பை, வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.

அதில், ‘’கடந்த 41 வருடமாக இந்திய சினிமாவில் இருக்கிறேன். 59 வயது ஆகிறது. 340 படங்களில் நடித்திருக்கிறேன். முதன் முறையாக கேமராவுக்கு பின்னால் செல்லலாம் என முடிவு செய்திருக் கிறேன். அதாவது படம் இயக்க இருக்கிறேன். நான் இயக்கும் படத்தின் பெயர் பாரூஸ். இது குழந்தை களுக்கான 3 டி, ஃபேண்டஸி படம். இதில் ஸ்பானிஷ் சினிமாவின் முக்கிய நடிகர்களான பாழ் வேஹா (Paz vega), ரஃபேல் அமர்கோ (Rafael Amargo) நடிக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதன் கதை 400 வருடத்துக்கு முன் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. வாஸ்கோடகாமாவின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஒருவரை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் பின்னணியில் உருவாகும் இந்த கற்பனை கதையை, ’மைடியர் குட்டிச்சாத்தான்’ இயக்குனர் ஜிஜோ புன்னூஸ் எழுதியுள்ளார். ஏராளமான பொருட் செலவில் உருவாகும் இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com