கொரோனா பேரிடரால் பார் செக்யூரிட்டி ஆன மலையாள டூப் கலைஞரின் பரிதாப நிலை

கொரோனா பேரிடரால் பார் செக்யூரிட்டி ஆன மலையாள டூப் கலைஞரின் பரிதாப நிலை
கொரோனா பேரிடரால் பார் செக்யூரிட்டி ஆன மலையாள டூப் கலைஞரின் பரிதாப நிலை

சினிமாவில் பிரபல நடிகருக்கு டூப் கலைஞராக நடித்தவரின் நிலை குறித்து கேரள நெட்டிசன்கள் பதிவிட்டு உதவி கேட்டு வருகின்றனர்.

திரைப்படத்துறையில் நமக்கு தெரியாத வகையில் பல்வேறு நபர்களும் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் நடிகர்களுக்கு டூப்பாக நடிக்கும் தொழிலாளிகள். ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள், இரட்டை கதாபாத்திரங்கள் போன்றவற்றில் நடிப்பார்கள் என்றாலும், இப்படி டூப்பாக நடிப்பவர்கள் ஸ்டண்ட் கலைஞர்களாக பெரும்பாலும் இருப்பார்கள். பெரும்பாலும் நடிகர்களின் சண்டைக்காட்சிகள்தான் அவர்களுக்கு பிழைப்பைத் தரும். ஆனால் இவர்களுக்கு வேலை என்பது பெரிதாக இருப்பது கிடையாது.

படப்பிடிப்பு இல்லாத தருணங்களில் அவர்கள் பிற பணிகளை செய்வது வழக்கம். அப்படி ஒரு நபர்தான் சில நாட்களாக நெட்டிசன்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறார். அவர் பெயர் ராஜன் கோயிலாண்டி. இவர் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளிவந்த 'ராவணபிரபு' என்கிற படத்தில் மோகன்லாலுக்கு டூப்பாக நடித்தவர். இந்தப் படத்தில் மோகன்லால் தந்தை - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

மலையாள சினி உலகில் கிட்டத்தட்ட, 30 வருடமாக இந்த ராஜன் கோயிலாண்டி உதவி கலை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். என்றாலும் பெரிதளவு சம்பாதிக்கவில்லை. இதற்கிடையே, கடந்த ஒன்றரை வருடமாக இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா பாதிப்பு சினிமா உலகையும் விட்டுவைக்காதது போல் ராஜனையும் விட்டுவைக்கவில்லை. இதனால் வேலை இழந்த ராஜன் பிழைப்புக்கு வழியில்லாமல் தனியார் மது பார் ஒன்றில் செக்யுரிட்டியாக பணிக்குச் சேர்ந்து சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதனைக் கண்ட சினிமா உலகை சேர்ந்த சிலர், அவரின் நிலையை கேள்விப்பட்டு அதனை ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பகிர, கேரள நெட்டிசன்களும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள ராஜன் கோயிலாண்டி, ``சினிமாவில் இருப்பவர்களுக்கு அந்த தொழில் நிரந்தரமாக இருக்க முடியாது. எனவே நமக்கு அடுத்த வேளை உணவு வேண்டும் என்றால் நாம் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது. இதனால் செக்யூரிட்டி பணியில் சேர்த்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com