இயற்கை விவசாயத்தில் இறங்கிய மோகன்லால்..

இயற்கை விவசாயத்தில் இறங்கிய மோகன்லால்..

இயற்கை விவசாயத்தில் இறங்கிய மோகன்லால்..
Published on

வீட்டிலேயே இயற்கை விவசாயம் பார்க்கும் மோகன்லால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது

மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மோகன்லால். சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் அவர் தனது உடற்பயிற்சி, படப்பிடிப்பு பணிகள், வாழ்த்துப் பதிவுகள், விழிப்புணர்வு தகவல்கள் என வழக்கமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.

ஊரடங்கு தொடக்க காலத்தில் சில மாதங்கள் மோகன்லால் சென்னையில் உள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர் சொந்த மாநிலமான கேரளாவுக்குச் சென்றார். கொச்சியில் அவரது வீட்டை ஒட்டி சிறிது விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த இரு மாதங்களாக மோகன்லால் விவசாயம் பார்த்து வருகிறார். தற்போது அந்த நிலத்தில் வாழை மற்றும் காய்கறிகள் விளைந்துள்ளன.

காலையிலும் , மாலையிலும் பல மணி நேரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது, மண்வெட்டியால் குழி தோண்டுவது எனத் தீவிர விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தார். தனக்கு நடிக்க மட்டுமல்ல, விவசாயமும் நன்றாகவே தெரியும் என்று கூறும் மோகன்லால், இன்று திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com